Lybrate Logo
Get the App
For Doctors
Login/Sign-up
Book Appointment
Treatment
Ask a Question
Plan my Surgery
Health Feed
tab_logos
About
tab_logos
Health Feed
tab_logos
Find Doctors

லிபோசக்ஷன் (Liposuction) ( கொழுப்பு உறிஞ்சுதல்) பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 26, 2023

லிபோசக்ஷன் (கொழுப்பு உறிஞ்சுதல்) என்றால் என்ன? (What is liposuction)

Topic Image

லிபோசக்ஷன் என்பது பிளாஸ்டிக் சர்ஜரி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உடலில் இருந்து கொழுப்பை அகற்றும் முறை . இந்த செயல்முறை லிப்போ, லிபோபிளாஸ்டி அல்லது பாடி காண்டூரிங் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒப்பனை அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, இது ஒரு பிரபலமான தேர்வாகும்.

லிபோசக்ஷன் செயல்முறை ஒரு நபரின் உடல் வடிவம் அல்லது மேடுபள்ள அமைப்பை மேம்படுத்த பயன்படுகிறது. தொடைகள், இடுப்பு, பிட்டம், வயிறு, கைகள், கழுத்து மற்றும் முதுகு போன்ற உடலின் பாகங்களில் அதிக கொழுப்பைக் குறைக்க இது செய்யப்படுகிறது. அதிகப்படியான கொழுப்பை அகற்ற உணவு மற்றும் தீவிர உடற்பயிற்சிகுப் பிறகு லிபோசக்ஷன் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக லிபோசக்ஷன் எடை குறைப்புக்கான ஒரு முறையாகவோ அல்லது மாற்றாகவோ கருதப்படுவதில்லை. சில பகுதிகளில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அதை அகற்றவும், தொடர்ந்து சரியான எடையை பராமரிக்கவும் லிபோசக்ஷன் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

லிபோசக்ஷன் சிகிச்சையின் வகைகள் என்ன? (Types)

பல்வேறு வகையான லிபோசக்ஷன் அறுவை சிகிச்சைகள் உள்ளன. உங்கள் தேவைகளைப் பொறுத்து எந்த வகையான அறுவை சிகிச்சை உங்களுக்கு பொருத்தமானது என்பதை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைப்பார். லிபோசக்ஷன் சிகிச்சையின் பல்வேறு வகைகள்.

  1. ட்யூமசென்ட் லிபோசக்ஷன்
    லிபோசக்ஷன் சிகிச்சைகளில் மிகவும் பிரபலமான ஒன்று ட்யூமசென்ட் லிபோசக்ஷன் ஆகும். இது சிகிச்சை செய்யப்படும் பகுதியில் நோய் நுண்மை நீக்கப்பட்ட திரவத்தை உட்செலுத்தி செய்யப்படும் சிகிச்சை முறை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த திரவம் கொழுப்பை அகற்ற உதவும் உப்பு அடங்கியதும் - வலியை குறைக்கும் மயக்க மருந்து - இரத்த நாளங்களை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் கொண்டது .இந்த திரவம் செலுத்தப்பட்ட பிறகு வீக்கம் மற்றும் விறைப்பு ஏற்படும். உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் தோலில் சிறு கீறல் போடப்பட்டு தோலின் கீழ் ஒரு சிறிய குழாய் செருகப்படும். கேனுலா எனப்படும் இந்த குழாய் மூலம் காற்று உறிஞ்சும் கருவி உதவியுடன், கொழுப்பு மற்றும் திரவம் சிகிச்சை பகுதியில் இருந்து உறிஞ்சப்படும் .
  2. சூப்பர் வெட் லிபோசக்ஷன்
    இது ட்யூமசென்ட் லிபோசக்ஷன் போன்றே செய்யப்படுகிறது . சிகிச்சை செய்ய வேண்டிய இடத்தில் திரவம் செலுத்தப்படும் . ஆனால் சூப்பர் வெட் லிபோசக்ஷனில் திரவம் விரைவில் பரவுவதோடு சிகிச்சை முடிவடைய குறைந்த நேரமே எடுக்கும். இந்த திரவத்தில் லிடோகைன், இரத்த நாளங்களை கட்டுப்படுத்தும் (எபிநெஃப்ரின்) உட்பட பல பொருட்கள் உள்ளன, இவை உப்பு நீரைத் தக்கவைக்கவும் இரத்தப்போக்கை குறைக்கவும் பயன்படுகிறது .அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை பெறுபவரின் உடலில் தேவைப்பட்ட பகுதியில் திரவத்தை செலுத்தி, கானுலா எனப்படும் உறிஞ்சும் கருவியை பயன்படுத்தி அதிகப்படியான கொழுப்பை அகற்றுவார் .
  3. அல்ட்ராசவுண்ட்-உதவியுடன் கூடிய லிபோசக்ஷன் (UAL)
    அல்ட்ராசவுண்ட் உதவியுடன் லிபோசக்ஷன் சிகிச்சை தனியாகவோ அல்லது ட்யூமசென்ட் லிபோசக்ஷனுடன் இணைந்தோ செய்யப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் தோலின் அடியில் ஒரு உலோக கம்பியைச் செருகுவதற்கு ஒரு சிறிய கீறல் ஏற்படுத்தபடும் .இந்த உலோகக் கம்பியில் இருந்து வெளியேற்றப்படும் அல்ட்ராஸோனிக் கற்றை சிகிச்சை பகுதியில் உள்ள கொழுப்பு-செல்களின் சுவர்களை உடைக்கவும், கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. இது செல்கள் சிதைவதற்கும் கொழுப்பு உறிஞ்சபடுவற்கும் வழிவகுக்கிறது.
  4. லேசர்-உதவி லிபோசக்ஷன் (LAL)
    லேசர்-உதவி லிபோசக்ஷன் சிகிச்சை அதிக வீரியம் கொண்ட லேசர் கதிர்களைப் பயன்படுத்தி கொழுப்பு செல்களை உடைப்பதன் மூலம் செய்யப்படுகிறது . லேசர் ஃபைபரைச் செருகுவதற்கு தோலில் சிறிய கீறல்கள் செய்யப்படுகின்றன.சிகிச்சை பகுதியில் உள்ள கொழுப்பு செல்கள் லேசர் ஃபைபரால் சிதைக்கப்பட்டு கொழுப்பு திரவமாக்கப்பட்ட பின்னர் கேனுலா மூலம் உறிஞ்சப்படுகிறது.

டம்மி டக் முறையில் இருந்து லிபோசக்ஷன் முறை எவ்வாறு வேறுபடுகிறது?

மக்கள் தங்கள் தொடைகள், இடுப்பு, வயிறு அல்லது பிற குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிறிய கொழுப்பு படிவுகளை அகற்ற விரும்பும் போது லிபோசக்ஷனை தேர்வு செய்கிறார்கள். டம்மி டக் கொழுப்பை நீக்குவதற்கு மட்டுமல்ல, அதிகப்படியான சதையை அகற்றுவதற்கும் பயனுள்ள சிகிச்சை. இந்த முறை மூலம் ஒரு தட்டையான வயிற்றுப்பகுதியை பெற முடியும். பருமனான உடல்வாகை கொண்டவர்களுக்கு எடையை குறைப்பதற்காக லிபோசக்ஷனை விட டம்மி டக் முறையே நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வயிற்றைத் தவிரவும் கைகள், கன்னம் , கால்களிலும் லிபோசக்ஷன் செய்யலாம். டம்மி டக் முறை சிகிச்சையில் அதிகப்படியான சதையை அகற்ற வயிற்றுப் பகுதியின் தசைகள் இறுக்கப்படுகின்றன. அதிகப்படியான சதை மற்றும் தளர்வான தசைகள் போன்றவற்றிக்கு லிபோசக்ஷன் மூலம் சிகிச்சையளிக்கப்படுவதில்லை.

லிபோசக்ஷன் ஒரு பெரிய அறுவை சிகிச்சையா அல்லது சிறிய அறுவை சிகிச்சையா?

லிபோசக்ஷன் சிகிச்சை பெரியதா அல்லது சிறியதா என்பது . நோயாளியின் உடலின் எடை மற்றும் அகற்றப்பட வேண்டிய கொழுப்பின் அளவைப் பொறுத்தது. சிகிச்சை முறை இதன் அடிப்படையில் மாறுபடலாம்.

pms_banner

லிபோசக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரைவாக குணமடைய வழிமுறைகள்

லிபோசக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரைவாக குணமடைய சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். விரைவாக குணமடைவது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளுடன் தொடங்குகிறது.

செய்யவேண்டியவை (லிபோசக்ஷனில் செய்ய வேண்டியவை) Do’s

உங்கள் எடையை பராமரிக்கவும் - உங்கள் உடல் எடையை பராமரிப்பதுடன் வைட்டமின் சி, பி12, புரதங்கள், நார்ச்சத்து , பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் உங்கள் எடை நிலையானதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் முடிந்தவரை உங்கள் இயல்பான, ஆரோக்கியமான எடைக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் எடை ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையான எடையை பராமரித்தால் பலன்கள் சிறப்பாக இருக்கும்.

  • நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் - லிபோசக்ஷனில் இருந்து மீண்டு வரும்போது, நீரிழப்பு ஏற்படாமல் இருப்பது அவசியம். தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை விரைவாக மீட்டெடுக்கலாம்.
  • இலகுவான செயல்களில் ஈடுபடுங்கள் - வீட்டில் நடக்கவும் - லிபோசக்ஷன் முடிந்த முதல் 24 மணி நேரத்தில், குறுகிய நடைப்பயிற்சி உட்பட, லேசான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த நீங்கள் வீட்டில் சிறிது நடக்க நடந்து திரிதல் வேண்டும், ஆனால் கடுமையான செயல்பாட்டைத் தவிர்க்கவும்.
  • உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் கொடுக்கப்பட்ட உடலோடு ஒட்டியிருக்கும் பிரத்தியேக ஆடைகளை அணியுங்கள்- நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, உங்களுக்கு உடலோடு ஒட்டியிருக்கும் பிரத்தியேக ஆடைவழங்கப்படும், அதை நீங்கள் தொடர்ந்து அணிய வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இந்த ஆடைகள் மற்றும் காயங்களை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். மேலும் , அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதியை அழுத்தம் இல்லாமல் வைத்திருக்க தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
  • உங்கள் சிகிச்சைக்கு பின் உள்ள பரிசோதனைகளில் சரியான நேரத்தில் கலந்துகொள்ளுங்கள்- உங்கள் சிகிச்சைக்கு பின் உள்ள சந்திப்புகளில் நீங்கள் சரியான நேரத்தில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்கள் குணமடைதலில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உங்களுக்கு பொருத்தமான மாற்றங்களைச் செய்ய உதவியாயிருக்கும்.

லிபோசக்ஷனில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள். (Dont’s)

  • ஆஸ்பிரின் அல்லது இப்யூபுரூஃபனை எடுத்துக் கொள்ளாதீர்கள் - ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபனை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக எடுத்துக் கொள்ளும்போது இரத்தப்போக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு சக்திக்கு தீங்கு விளைவிப்பதோடு, உங்கள் அறுவை சிகிச்சையின் பின் குணமடைய அவை தடையாக இருக்கலாம். உங்களுக்கு வலி நிவாரணிகள் தேவை என்று நீங்கள் நினைத்தால் மாற்று மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசுங்கள்.
  • எந்தவொரு கடினமான செயலையும் செய்யாதீர்கள் - சிகிச்சையளிக்கப்பட்ட பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கடினமான வேலைகளிலும் , கடினமான செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பது முக்கியம். இரத்த அழுத்தத் தை அதிகரிக்கும் எந்த செயலிலும் நீங்கள் ஈடுபட்டால் ஆறாத காயத்தில் இருந்து இரத்தம் வரலாம். இதுபோன்ற செயல்களை மீண்டும் தொடங்குவதற்கு முன்பதாக உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் இதைப் பற்றி கலந்துரையாடுங்கள் .
  • புகைபிடிக்கவோ அல்லது மது அருந்தவோ வேண்டாம் - புகைபிடிப்பதால் உண்டாகும் நிகோடின் நிரந்தர வடுவை ஏற்படுத்தும் . மது அருந்துவதால் உட்கொள்ளும் மருந்துகளில் ஆல்கஹால் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் புகைபிடித்தல் குணமாகும் வேகத்தை குறைக்கிறது.
  • உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் பிரத்தியேக ஆடைகளை அகற்றாதீர்கள் - உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உடலோடு ஒட்டியிருக்கும் பிரத்தியேக ஆடைகளை அணியுமாறு பரிந்துரைத்தால், அதை அகற்ற வேண்டாம், ஏனெனில் அது வீக்கத்தைக் குறைக்கவும் உங்கள் குணமாகுதலை விரை வாக்கவும உதவுகிறது. உங்கள் பிரத்தியேக ஆடையை அடிக்கடி மாற்றும்போது செரோமா உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • காயத்தை நனைக்காதீர்கள் - காயம் ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அறுவை சிகிச்சை முடிந்து குணமாகிக்கொண்டு வரும்போது, குளியல் தொட்டிகள், சோனா குளியல்கள் , அதிக நேரம் குளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • நொறுக்குத் தீனிகளை உண்ணாதீர்கள் - நொறுக்குத் தீனிகள், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
  • எடை இழப்புக்கு லிபோசக்ஷனைப் பயன்படுத்த வேண்டாம் - குறிப்பாக எடையைக் குறைக்க லிபோசக்ஷன் பயன்படுத்தப்படக்கூடாது. உண்மையில் லிபோசக்ஷன் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை வடிவமைத்து, நீங்கள் எப்போதும் விரும்பும் தோற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது.

லிபோசக்ஷன் சிக்கல்கள்: அவை யாவை ? (Complication)

லிபோசக்ஷன் செயல்முறையானது குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியாகும். ஆயினும்கூட, எந்தவொரு அறுவை சிகிச்சையையும் போலவே, இதிலும் அறுவை சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்படலாம். இந்த சிக்கல்களில் பின்வருவன அடங்கும்:

  • கடுமையான சிராய்ப்புண் : சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் அறுவைசிகிச்சைக்குப் பிறகு வாரங்களுக்கு நீடிக்கும் பல சிராய்ப்புண்கள் இருக்கலாம்
  • அழற்சி: அழற்சியால் உண்டாகும் வீக்கம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கலாம், மேலும் கீறல்களில் இருந்து திரவம் தொடர்ந்து வெளியேறலாம்.
  • த்ரோம்போபிளெபிடிஸ்: நரம்பில் இரத்த உறைவு ஏற்படுவதால் அழற்சி உண்டாகலாம்
  • தோலில் வித்தியாசங்கள் உண்டாகலாம் . தோல் வாடி (சுருங்கி), வரிகள் தோன்றி அல்லது தோல் நெகிழ்வு தன்மை இழந்து மேடு பள்ள தோற்றம் உண்டாகலாம். காயம் குணமாகுதல் மாறுபடலாம் அல்லது சீரற்ற கொழுப்பு நீக்கம் ஏற்படலாம்.
  • உணர்வின்மை: பாதிக்கப்பட்ட பகுதியில் குறுகிய காலத்திற்கு உணர்வின்மை இருக்கலாம், ஆனால் இது பொதுவாக தற்காலிகமானது.
  • தோல் நோய்த்தொற்றுகள்: எப்போதாவது, லிபோசக்ஷன் அறுவை சிகிச்சைக்கு பின் தோல் தொற்று ஏற்படலாம். சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம், இது வடுவை ஏற்படுத்தும்.
  • உட்புற துளைகள்: உள் உறுப்பில் மிகவும் அரிதாக ஏற்படலாம்
  • இறப்பு: மயக்க மருந்து ஒரு சிறிய அளவிலான இறப்பு அபாயத்தைக் கொண்டுள்ளது.
  • சிறுநீரகம் அல்லது இதயப் பிரச்சனைகள்: ஊசியால் செல்துத்தப்பட்டதால் அல்லது உறிஞ்சுதலால் உடலில் திரவ அளவுகளில் ஏற்படும் மாற்றம் சிறுநீரகம் அல்லது இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
  • கொழுப்பு அடைப்பு: நுரையீரலில் இரத்த நாளங்களில் கொழுப்புச் சென்று நுரையீரலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுப்பதால் இரத்த உறைவு ஏற்படுகிறது. இந்த நிலையில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • நுரையீரல் வீக்கம்: உடலில் செலுத்தப்படும் திரவங்கள் சில சமயங்களில் நுரையீரலில் சேரலாம்.
  • ஒவ்வாமை எதிர்வினை: அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளால் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • தோல் எரிச்சல் : தோல் அல்லது நரம்பு உராய்வு எரிச்சல்கள் கானுலா இயக்கத்தின் விளைவாக ஏற்படலாம்.

இந்தியாவில் லிபோசக்ஷன் சிகிச்சைக்கு ஆகும் செலவு என்ன?

நோயாளியின் நிலையைப் பொறுத்து, இந்தியாவில் லிபோசக்ஷன் செலவு இந்திய ரூபாயில்35,000 முதல் 1,80,000. வரை இருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோயாளியின் உடலில் இருந்து எவ்வளவு கொழுப்பு அகற்றப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து செலவு இருக்கும்.

சிகிச்சை நிரந்தர விளைவை ஏற்படுத்துமா?

லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை உங்கள் உடலில் இருந்து கொழுப்பு செல்களை நிரந்தரமாக அகற்றும் திறன் கொண்டது. இருப்பினும், நீங்கள் எடையை மீண்டும் பெறலாம். உருவாகும் புதிய கொழுப்பு செல்கள் பொதுவாக உங்கள் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடும்அறுவைசிகிச்சைக்குப் பிறகு உங்கள் புதிய வடிவத்தை பராமரிக்க புரத சத்து குறைந்த உணவை அதிகம் எடுத்துக்கொள்ளவும் - பழங்கள் , காய்கறிகள், முழு தானியங்கள் , குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

லிபோசக்ஷன் சிகிச்சைக்கு பிறகு கொழுப்பு மீண்டும் உருவாகுமா?

சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில், லிபோசக்ஷன் மூலம் அகற்றப்பட்ட கொழுப்பு செல்கள் செயல்படாது மேலும் உங்கள் உடல் புதிய கொழுப்பு செல்களை உருவாக்காது. நீங்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தாலும், சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் மீதமுள்ள கொழுப்பு செல்கள் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது.

இதன் விளைவாக உங்கள் உடலின் மற்ற பாகங்களில் எடை அதிகரிப்பது சாத்தியமாகும், இது லிபோசக்ஷனின் ஒட்டுமொத்த கான்டூரிங் விளைவை பாதிக்கிறது. லிபோசக்ஷனுக்குப் பிறகு உங்கள் உடல் புதிய கொழுப்பு செல்களை உற்பத்தி செய்யாது என்பதால், சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் உங்கள் எடை அதிகரிக்காது . உங்கள் உடலில் மீதமுள்ள கொழுப்பு செல்கள் பெரிதாவதால் மற்ற இடங்களில் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.

லிபோசக்ஷனுக்குப் பிறகு கொழுப்பு திரும்பவும் சேராமல் தடுக்க உங்கள் உணவு பழக்கத்தை பராமரிப்பது எப்படி?

  • சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் புரதம் அடங்கிய ஆரோக்கியமான உணவை உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கொழுப்பு சத்து , சர்க்கரை சத்து குறைந்த அதிக அளவில்லாத ஆரோக்கியமான உணவை உண்ணும் வகையில் உணவு பழக்கத்தை ஒழுங்கமைக்கவும்.
  • உடலில் நீர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்தால் அல்லது வெப்பமான மற்றும் வறண்ட சூழலில் தங்கியிருந்தால் இதை கவனியுங்கள் .
  • கலோரிகளை எரிக்கவும், தசையின் பலத்தை மேம்படுத்தவும், வழக்கமான உடற்பயிற்சி அவசியம்.
  • உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் இருந்து சிகிச்சைக்கு பின்பான பராமரிப்பு ஆலோசனையைப் பெறுங்கள்.

லிபோசக்ஷன் மூலம் இடுப்பில் சேரும் கொழுப்பை அகற்ற முடியுமா?

லிபோசக்ஷன் மூலம் கொழுப்பு செல்களை அகற்றபடுவதால் இடுப்பில் சேரும் கொழுப்பை நிரந்தரமாக அகற்றலாம்.

லிபோசக்ஷன் சிகிச்சைக்கு தகுதியானவர்கள் யார் ?

நீங்கள் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருந்து பின்வரும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் .

  • வயது18 அல்லது அதற்கு மேற்பட்டவராய் இருக்கவேண்டும்
  • நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வயது வந்தவராயிருந்து, நிர்ணயிக்கப்பட்ட உடல் எடையில் 30% க்கு மேல் மிகாமல் நல்ல தசை பலமும் , நெகிழ்ச்சித்தன்மையுள்ள சருமமும் உள்ளவராய் இருக்கவேண்டும்.
  • மருத்துவ ரீதியான வேறு பிரச்சனைகள் இல்லாவிட்டால் குணமடைவதைத் துரிதப்படுத்தலாம்.
  • உணவுக் கட்டுப்பாடு செய்தும், உடற்பயிற்சி செய்தும் பலன் காணதவர்கள்
  • புகை பிடிக்காதவர்கள்

இந்த அறுவை சிகிச்சைக்கு யார் தகுதியானவர்களாக கருதப்பட மாட்டார்கள்?

பின்வரும் நிபந்தனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவராக கருதப்பட மாட்டீர்கள்:

  • செல்லுலைட்டை அகற்றுவது லிபோசக்ஷன் மூலம் சாத்தியமில்லை, ஏனெனில் இது உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழி அல்ல.
  • 30%க்கு மேல் அதிக எடை அல்லது பருமனான நபராய் இருந்தால்
  • ஏதேனும் மருத்துவ நிலை அல்லது நோயின் விளைவாக உங்கள் உடலின் குணப்படுத்தும் திறன்கள் பாதிக்கப்பட்டிருந்தால்.
  • உங்கள் தோல் தளர்வாக இருந்தால் அல்லது நெகிழ்ச்சித்தன்மை குறைவாக இருந்தால்.

லிபோசக்ஷன் சிகிச்சைக்கு பிந்தைய வழிகாட்டுதல்கள் என்ன?

லிபோசக்ஷன் சிகிச்சைக்கு பிந்தைய சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைவாக குணமடைவதையும் பழைய நிலைக்கு வருவதையும் உறுதிசெய்ய வேண்டும். பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்திருப்பது உங்களுக்கு உதவும்:

  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட மயக்க மருந்ததின் தாக்கம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இதன் விளைவாக, முதல் இரண்டு நாட்களில் தளர்ந்த, பலவீனமான உணர்வு ஏற்படுவது சாதாரணமானது. அந்த நாட்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் கீறல் இடங்களிலிருந்து இரத்தப்போக்கு அல்ல திரவம் வெளியேறலாம். ஒவ்வொரு நாளும் காயத்தை கட்டிய துணி மாற்றப்பட வேண்டும், அதை எப்படி செய்வது என்று உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
  • வீக்கம் மற்றும் வலியைத் தடுக்க உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் உடலோடு ஒட்டியிருக்கும் பிரத்தியேக ஆடை பரிந்துரைக்கப்படும்.
  • அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய தொற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்க, உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலி மருந்துகளை வழிகாடுதலின்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குணமாகும் செயல்பாட்டின் போதும் , பழைய நிலைக்கு திரும்பும்போதும் , புகைபிடித்தல் மது அருந்துதல் தவிர்க்கப்பட வேண்டும்
  • ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் கூடிய விரைவில் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

லிபோசக்ஷன் சிகிச்சையின் பக்க விளைவுகள் என்ன?

லிபோசக்ஷன் பக்க விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம். லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை மூலம் உங்கள் உடலின் கொழுப்பு செல்கள் இலக்கு பகுதிகளில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும். இதன்பின் உங்கள் எடை அதிகரித்தால் கொழுப்பு உங்கள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் சேரும். இந்த புதிய கொழுப்பு கல்லீரல் அல்லது இதயத்தைச் சுற்றி உருவானால் அது ஆபத்தானது, ஏனெனில் அது தோலின் கீழ் ஆழமாக உண்டாகிறது.லிபோசக்ஷன் பக்க விளைவுவால் உண்டாகும் நரம்பு பாதிப்பு காரணமாக சிலருக்கு தொடு உணர்வுகளில் மாற்றம் நிகழலாம். சில சந்தர்ப்பங்களில், உறிஞ்சுதலால் உறிஞ்சப்பட்ட பகுதியில் மேடு அல்லது பள்ளத்தை ஏற்படுத்தலாம் அல்லது சீரற்ற மடிப்பான தோலை ஏற்படுத்தலாம்.

லிபோசக்ஷன் - கண்ணோட்டம் / முன்கணிப்பு

வீக்கம் தணிந்தவுடன் லிபோசக்ஷன் முடிவுகள் தெளிவாகத் தெரிய சிறிது காலம் எடுக்கும். சில சந்தர்ப்பங்களில், சில மாதங்கள் கூட தேவைப்படலாம். சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு வீக்கம் குறைவதால் மொத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும்.

உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், நிரந்தரமான முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். சிகிச்சைக்குப் பிறகு எடை கூடினால் கொழுப்பு விநியோகம் மாறலாம். நீங்கள் அடைந்த புதிய வடிவத்தை ஆரோக்கியமான உணவு ,வழக்கமான உடற்பயிற்சி மூலம் பராமரிக்க முடியும்.

உள்ளடக்க அட்டவணை

உள்ளடக்க விவரங்கள்
Profile Image
எழுதப்பட்டதுDrx Hina FirdousPhD (Pharmacology) Pursuing, M.Pharma (Pharmacology), B.Pharma - Certificate in Nutrition and Child CarePharmacology
Reviewed By
Profile Image
Reviewed ByDr. Bhupindera Jaswant SinghMD - Consultant PhysicianGeneral Physician
Need more help 

15+ Years of Surgical Experience

All Insurances Accepted

EMI Facility Available at 0% Rate

எனக்கு அருகிலுள்ள நிபுணரைக் கண்டுபிடி

pms_banner
chat_icon

இலவச கேள்வியைக் கேளுங்கள்

மருத்துவர்களிடமிருந்து இலவச பல கருத்துகளைப் பெறுங்கள்

அநாமதேயமாக இடுகையிடப்பட்டது