பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr)
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) பற்றி
இந்த மருந்து இரண்டு மருந்துகளின் கலவையாகும், அவற்றில் ஒன்று டோபமைன் எதிர்ப்பியின் வகையின் கீழ் வருகிறது, மற்றொன்று புரோட்டான் பம்ப் தடுப்பானாகும். அதன் செயலில் உள்ள பொருட்களில் பான்டோபிரஸோல் சோடியம் செஸ்குஹைட்ரேட் மற்றும் டோம்பெரிடோன் ஆகியவை அடங்கும். இந்த மாத்திரைகள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைப்பதற்காக அறியப்படுகின்றன.
இரைப்பைப் புண், சிறுகுடலில் புண்கள், நெஞ்செரிச்சல், வாயு, இடியோபாதிக் காஸ்ட்ரோபரேசிஸ், நீரிழிவு காஸ்ட்ரோபரேசிஸ், பெல்ச்சிங், வயிறு முழுமையாக இருக்கும் உணர்வு, அடக்க முடியாத குமட்டல் மற்றும் வாந்தி, வாயு, இரைப்பை-சுரக்கும் கட்டிகள், ஈசோஃபேஜியல் மியூகோசல் காயங்கள் மற்றும் பல போன்ற பல்வேறு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் இரைப்பைக் குழாயில் டோபமைன் ஏற்பிகளைத் தடுக்கிறது, அதனால்தான் இது வயிற்று அமிலத்தைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். பான்-டி என்பது குமட்டலைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த மருந்து ஆகும். ஏனெனில் இது உங்கள் இரைப்பைக் குழாயின் வெளியேறும் இடத்திற்கு அருகில் உள்ள கீழ் தசைகளை தளர்த்துவதன் மூலம் செயல்படுகிறது.
இது பாதையின் ஆரம்பத்தில் உள்ள தசைகளையும் இறுக்கமடையச் செய்கிறது. இதன் விளைவாக, உணவு மிக விரைவாக செல்கிறது மற்றும் நீங்கள் குமட்டல் மற்றும் வாந்தியை அனுபவிக்க நேரவில்லை. பொதுவாக, மருத்துவர்கள் 10 மி.கி மருந்தின் அளவை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இந்த மருந்துகள் 30 மி.கி மற்றும் 40 மி.கி போன்ற அதிக அளவுகளிலும் கிடைக்கின்றன.
உங்கள் உடல் எடை மற்றும் பிற உடல்நலக் கவலைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் உங்களுக்கான சரியான அளவைக் கணக்கிடுகிறார்கள். இதனால்தான் உங்கள் தற்போதைய மருந்தெடுப்பு அளவு உங்களுக்கு உதவாது என்று நினைத்து சுயமாகவே மருந்தின் அளவை அதிகரிக்கக்கூடாது.
உங்கள் மருந்துகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள். இந்த காப்ஸ்யூலை நீங்கள் ஏதாவது சாப்பிடுவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு, வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்து ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், சில நோயாளிகள் தங்கள் உடல்நிலை காரணமாக அதிக முறை எடுக்க வேண்டியும் இருக்கலாம்.
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன ?
அரிப்புடனான உணவுக்குழாய் அழற்சி (Erosive Esophagitis)
இரைப்பைஉணவுக்குழாய் பின்வழிதல் நோய் (Gastroesophageal Reflux Disease)
வயிற்று புண் (Peptic Ulcer)
ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று (Helicobacter Pylori Infection)
சோலிங்கர்-எலிசன் நோய்க்குறி (Zollinger-Ellison Syndrome)
குமட்டல் அல்லது வாந்தி (Nausea Or Vomiting)
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன ?
இதய நோய்கள் (Heart Diseases)
எலும்பு முறிவு (Fracture of Bones)
வைட்டமின் பி 12 குறைபாடு (Vitamin B12 Deficiency)
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) பக்க விளைவுகள் என்னென்ன ?
தலைவலி (Headache)
முடி வளர்ச்சி அதிகரிப்பு (Increased Hair Growth)
இதய தாள கோளாறுகள் (Heart Rhythm Disorders)
வலிப்புகள் (Convulsions)
மார்பக மென்மை (Breast Tenderness)
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) முக்கிய சிறப்பம்சங்கள்
விளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்?
இது உங்கள் உடலில் 12 மணி நேரம் வரை நீடிக்கும்.
என்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது?
இந்த மருந்தை எடுத்துக்கொண்ட 30-60 நிமிடத்திற்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் செயல்படத் தொடங்குகிறது.
அது பழக்கத்தை உருவாக்குமா?
இந்த மருந்து போதையோ அல்லது பழக்கத்தையோ உருவாக்கும் போக்கினை கொண்டது அல்ல.
ஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா?
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவர்களால் குறிப்பாக அறிவுறுத்தப்படாவிட்டால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் நன்மைகள் அதன் அபாயங்களை விட அதிகமாக இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை குழந்தைளில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், அதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு அதன் பயன்பாட்டைக் குறித்து உங்கள் மருத்துவரிடம் நீங்கள் நன்கு கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா?
பாலில் சுரக்கும் மருந்தின் அளவு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் அளவை விட மிகவும் குறைவு, பொதுவாக சாதாரண அளவுகளில் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நோயாளி அதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.
இது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா?
மது எடுத்துக் கொள்ளும்போது இந்த மருந்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும், பாதுகாப்பான நிலையிலேயே இருக்க, நீங்கள் உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி பேச வேண்டும்.
இந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா?
ஆம், இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதுதான்.
இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா?
இந்த மருந்து சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தாது.
இது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்?
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மருந்தளவு மற்றும் பக்க விளைவுகள் சுகாதார நிபுணர்களால் மிக நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில் தவறாக உட்கொண்டால் இந்த மருந்து கல்லீரலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் நோயின் வரலாற்றைக் கொண்டவர்களுக்கும் இதுவே பொருந்தும்.
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை ?
கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.
- ஜிபான்ட் டி எஸ்ஆர் காப்ஸ்யூல் (Zipant D Sr Capsule)
FDC Ltd
- பண்டாகைன்ட்- டிஎஸ்ஆர் காப்ஸ்யூல் (Pantakind-Dsr Capsule)
Mankind Pharma Ltd
- பாண்டடோம் -எஸ்ஆர் காப்ஸ்யூல் (Pantadom -Sr Capsule)
Mankind Pharma Ltd
- பான்டோஃப்ரெஷ்-டி எஸ்ஆர் காப்ஸ்யூல் (Pantofresh-D SR Capsule)
Samarth Life Sciences Pvt Ltd
- பாரிடன் டி 30 மி.கி / 40 மி.கி மாத்திரை எஸ்.ஆர் (Paridon D 30 Mg/40 Mg Tablet Sr)
Symbiosis Lab
- டைஸ்பான் டி எஸ்ஆர் கேப்ஸ்யூல் (Dyspan D Sr Capsule)
Gracious Pharmaceuticals
- பேனேஜ் டி 30 மி.கி / 40 மி.கி கேப்ஸ்யூல் எஸ்.ஆர் (Panage D 30Mg/40Mg Capsule Sr)
Rion Lifesciences Pvt Ltd
- பான்டோஃபெர் டி எஸ்ஆர் கேப்ஸ்யூல் (Pantofer D Sr Capsule)
Biophar Lifesciences Pvt Ltd
- ஆட் பான்டோ டி எஸ்ஆர் கேப்ஸ்யூல் (Add Panto D Sr Capsule)
Addsum Lifesciences
- பாண்டாசர்-டி எஸ்.ஆர் கேப்ஸ்யூல் (Pantasur-D SR Capsule)
Salas Pharmaceuticals
மருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை?
தவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா?
இந்த மருந்தின் அளவை எடுக்காமல் தவறவிடுவது என்பது தீங்குகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை. நீங்கள் அதை எடுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளும்போது உங்கள் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், முந்தைய நாளின் பற்றாக்குறையை ஈடுகட்ட மறுநாள் மருந்தெடுப்பின் அளவை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமில்லை.
மிகை மருந்தளிப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா?
இந்த மருந்தை அதிகமாக உட்கொள்வது சோர்வு, வலிப்பு மற்றும் மயக்கம் போன்ற அடையாளம் காணக்கூடிய பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த மருந்தை நீங்கள் அதிகமாக உட்கொண்டதாக சந்தேகித்தால், உடனடியாக உங்கள் சுகாதார வழங்குநரை அணுகி ஆலோசனைப் வேண்டும்.
மருந்து எப்படி வேலை செய்கிறது?
இது இரட்டை செயலை உருவாக்குகிறது, முதலில் இது ரசாயன டோபமைனின் எந்த வெளியீட்டையும் ஏற்படுத்தாமல் டோபமினெர்ஜிக் ஏற்பிகளுடன் இணைகிறது. இது, இரைப்பையைக் காலியாக்குவதற்கு உதவுகிறது மற்றும் சிறுகுடல் போக்குவரத்து நேரத்தை குறைக்கிறது. ஒரே நேரத்தில் H + / K + உடன் இணைந்து - இரைப்பை பாரிட்டல் கலங்களில் ATPase (புரோட்டான் பம்ப்) பரிமாற்றம் செய்கிறது, இதன் விளைவாக அமில சுரப்பு தடைபடுகிறது.
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) மருந்துக்கான இடைவினைகள் யாவை ?
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.
- test
Interaction with Alcohol
மது உடனான குறிப்பிட்ட இடைவினைகள் எதுவும் இல்லை, இருப்பினும், மருந்துகளுடன் மது கலக்காமல் இருப்பது நல்லது.
Interaction with Medicine
இது வார்ஃபரின், டிகோக்சின், நெல்ஃபினாவிர், கீட்டோகோனசோல் மற்றும் மெத்தோட்ரெக்ஸேட் ஆகியவற்றுடன் எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் முன்பு பட்டியலிடப்பட்டவற்றை ஏற்கனவே எடுத்துக்கொண்டால் இந்த மருந்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
Interaction with Disease
இந்த மருந்து நோய்களுடன் சில எதிர்மறையான இடைவினைகளை ஏற்படுத்தும். நீங்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டதற்கான வரலாற்றைக் கொண்டிருந்தால், உங்கள் சுகாதார வழங்குநர் உங்கள் அளவு மற்றும் பக்க விளைவுகளை கவனமாகவும் சீராகவும் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் பான் டி காப்ஸ்யூல் மேலும் கல்லீரல் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மருந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது எலும்புகள் அடிக்கடி உடைவதற்கு வழிவகுக்கும். மருந்தின் நீடித்த பயன்பாடு அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுதியாக, ஹைப்போமேக்னீசெமியா நோயாளிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த மாத்திரை இரத்த ஓட்டத்தில் மெக்னீசியம் அளவைக் குறைக்கும். நீங்கள் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை சந்தித்தால், அவற்றை உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
Interaction with Food
உணவுடன் எந்தவித எதிர்மறையான இடைவினைகள் எதுவும் இல்லை.
பான்-டி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Pan-D Capsule Sr) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):
Ques : பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
Ans :
இது பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது:
அரிப்பு உணவுக்குழாய் அழற்சி - தீவிர அமிலத்தன்மையால் ஏற்படும் உணவுக்குழாய் வீக்கம் மற்றும் கடுமையான புண்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது.
இரைப்பை-டியோடினல் புண்கள் - இரைப்பை (வயிறு) மற்றும் டியோடினல் (சிறுகுடல்) புண்களுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தத்தால் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.
ஸோலிங்கர்-எல்லிசன் நோய்க்குறி - சிறு குடல் கட்டிகளால் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் அமிலத்திற்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
ஜிஆர்டி (இரைப்பைஉணவுக்குழாய் பின்வழிதல் நோய்) - இது பின்வழிதல் நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும், இதில் வயிற்று அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்கிறது, இது எரிச்சலின் உணர்வைத் தருகிறது.
Ques : கர்ப்ப காலத்தில் பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் பயன்படுத்த பாதுகாப்பானதா?
Ans :
இது பான்டோபிரஸோல் மற்றும் டோம்பெரிடோன் எனப்படும் மருந்துக் குழுவிற்கு சொந்தமானது. இது ஒருபோதும் குழந்தைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நம்பப்படுகிறது, ஏனெனில் அதற்கான எந்த ஆய்வுகளும் இல்லை அல்லது மனித பரிசோதனைக்கான தரவுகளும் கிடைக்கவில்லை. எனவே, இந்த மருந்து கர்ப்ப காலத்தில் உட்கொள்வது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.
Ques : பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் எடுக்க சிறந்த நேரம் எது?
Ans :
இந்த மருந்தை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் வெறும் வயிற்றில் அல்லது முதல் உணவுக்கு முன் உட்கொள்வதாகும். ஆனால் ஒரே குழுவின் மருந்து அல்லது பிற மருந்துகளுக்கு ஒவ்வாமை இருப்பதாக அறிந்த நோயாளிகளுக்கு இது போதுமானதாக இல்லை.
Ques : தாய்ப்பால் கொடுக்கும் போது பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் பாதுகாப்பானதா?
Ans :
தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமில்லை என்றால் அது எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் அனைத்து ஆபத்துகள் மற்றும் நன்மைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
Ques : பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
Ans :
இல்லை, இந்த மருந்து சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் சிறுநீரக கோளாறுகள் உள்ள நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப்பு இல்லாமல் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
Ques : நீங்கள் பான்-டி கேப்சூல் எஸ்.ஆரை எவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?
Ans :
இந்த மருந்தை 8 வாரங்கள் வரை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நோயாளிகள் கடுமையான பக்க விளைவுகளை எதிர்கொண்டால், சரியான அளவு மருந்தினை எடுத்துக்கொள்வதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.
Ques : பான்-டி கேப்சூல் எஸ்.ஆர் உடன் ஆன்டாசிட்களை (அமில எதிர்ப்பு மருந்துகள்) எடுக்க முடியுமா?
Ans :
ஆம், நோயாளி இந்த மருந்தை எடுக்கும்போது ஆன்டாசிட்களை உட்கொள்ளலாம்.
Ques : பான்-டி கேப்சூல் எஸ்.ஆரின் பக்க விளைவுகள் என்ன?
Ans :
இதை உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். அவற்றில் வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், வாய்வு, தலைவலி ஆகியவை அடங்கும். இந்த மருந்தின் பிற பக்க விளைவுகள் வயிற்று வலி, வாய் வறட்சி, மங்கலான பார்வை, இரைப்பை பிரச்சினைகள் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா முதலியனவாகும்.
மேற்கோள்கள்
Domperidone- Drug Information Portal [Internet]. druginfo.nlm.nih.gov. 2020 [Cited 27 February 2020]. Available from:
https://druginfo.nlm.nih.gov/drugportal/name/domperidone
Domperidone- DrugBank [Internet]. Drugbank.ca. 2005 [Cited 27 February 2020]. Available from:
https://www.drugbank.ca/drugs/DB01184
Pantoprazole- Drug Information Portal [Internet]. druginfo.nlm.nih.gov. 2020 [Cited 27 February 2020]. Available from:
https://druginfo.nlm.nih.gov/drugportal/name/pantoprazole
Pantoprazole- DrugBank [Internet]. Drugbank.ca. 2005 [Cited 27 February 2020]. Available from:
https://www.drugbank.ca/drugs/DB00213
Lybrate is a medium to provide our audience with the common information on medicines and does not guarantee its accuracy or exhaustiveness. Even if there is no mention of a warning for any drug or combination, it never means that we are claiming that the drug or combination is safe for consumption without any proper consultation with an expert.
Lybrate does not take responsibility for any aspect of medicines or treatments. If you have any doubts about your medication, we strongly recommend you to see a doctor immediately.
உள்ளடக்க அட்டவணை
Ask a free question
Get FREE multiple opinions from Doctors